மர்ம காய்ச்சலுக்கு 8 மாத ஆண் குழந்தை பலி

ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 மாத ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெல்லையப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு இளமாறன் என்ற 8 மாத ஆண்குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. உடனடியாக குழந்தையை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதையொட்டி சுகாதார துறையினர் அந்த பகுதியில் மேலும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்