வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது
கோத்தகிரி அருகே வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
கோத்தகிரி: கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே லூக்ஸ் ஆலயம் பகுதியில் விஜய் என்பவரது வீட்டிற்குள் நேற்று மதியம் 12 மணியளவில் சுமார் 8 அடி நீளமுள்ள ஒரு சாரைப்பாம்பு புகுந்து பதுங்கி கொண்டது. வீட்டிற்குள் பாம்பு புகுந்ததை கண்டு அச்சம் அடைந்த விஜய் குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
தொடர்ந்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் புகுந்து பதுங்கியிருந்த 8 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டனர். பின்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.