மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுரை முனிச்சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாநகர், மாவட்டம் சார்பில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க மாநில தேர்தல் பொறுப்பு குழு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேந்திரன் தலைமை தாங்கினார். நகர் மாவட்ட செயலாளர்கள் ஜெயபால், ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமாேனார் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.