மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-12 17:57 GMT

வேலூர் அண்ணாகலையரங்கம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.ராஜா தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் கமலநாதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் எஸ்.ராஜா, பகுதி செயலாளர் வி.பி.எம்.குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்