நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் கட்டண உயர்வை கண்டித்தும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ராகவன், ஸ்டீபன் ஆகியோர் தலைமை தாங்கினர். அமைப்பு செயலாளர் ஜெங்கின்ஸ், வக்கீல் அணி துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஜூலியஸ், பொருளாளர் கமலேஷ், இணைச் செயலாளர் சவுமியா, துணைச் செயலாளர் இமாம் பாதுஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்ததால் கையில் குைட பிடித்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.