தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி
தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தலைமை தாங்கினார். மீன்பதன தொழில் நுட்பத்துறை தலைவர் கணேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அகிலன் மீன் உணவு பொருட்களில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கி பேசினார். பயிற்சியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேராசிரியர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை தலைவர் சுஜாத்குமார் நன்றி கூறினார்.