அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் அதிமுகவில் இணைந்தார்..!

அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் அதிமுகவில் இணைந்தார்.

Update: 2023-04-23 04:55 GMT

சென்னை,

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.மனோகரன், அமமுக கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்