அ.ம.மு.க. பிரமுகர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
அ.ம.மு.க. பிரமுகர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சி கார்த்திக் நகரை சேர்ந்தவர் ஆத்மநாதன். இவருடைய மகன் சரவணன் (வயது35). அ.ம.மு.க. பிரமுகர். இவர் மீது உணவு விடுதியை சூறையாடிய வழக்கும், ஒரத்தநாடு போலீஸ்காரரை தாக்கிய வழக்கும் உள்ளது. இந்த வழக்குகளில் போலீசார் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரையின்பேரில் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பரிசீலனை செய்து சரவணன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சரவணன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணத்தை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.