மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின் கட்டண உயர்வை கண்டித்தும், தி.மு.க. அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை முத்துக்கடையில் அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தனசேகர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.