திருவிழாவையொட்டி அம்மன் வீதிஉலா
திருவிழாவையொட்டி அம்மன் வீதிஉலா நடைபெற்றது.
லாலாபேட்டை கடைவீதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது. இரவு அம்மன் மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.