களக்காட்டில் அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி, அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன.

Update: 2022-10-06 19:53 GMT

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்மன் கோவிலில் தசரா திருவிழாவையொட்டி, பல்வேறு கோவில்களில் இருந்து வரும் அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து பக்தர்களுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு தசரா திருக்காட்சி சத்தியவாகீஸ்வரர் கோமதியம்மன் கோவில் முன் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இதில் களக்காடு கோவில்பத்து துர்கா பரமேஸ்வரி அம்மன், முப்பிடாதி அம்மன், விஸ்வகர்மா தெரு சந்தனமாரியம்மன், தோப்புத்தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன், கழுகேற்றி திருப்பம் முப்பிடாதி அம்மன், கப்பலோட்டிய தமிழன் தெரு முப்பிடாதி அம்மன், புதுத்தெரு முப்பிடாதி அம்மன், சிதம்பரபுரம் உச்சினிமாகாளி அம்மன், பாரதிபுரம் உச்சினிமாகாளி அம்மன் ஆகிய கோவில்களில் இருந்து வந்த அம்மன் சப்பரங்கள் அணிவகுத்து நின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்