ஆம்பூர் நகராட்சி கூட்டம்

ஆம்பூர் நகராட்சி கூட்டம், நகர மன்ற தலைவர் பி.ஏஜாஸ் அகமது தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Update: 2022-10-21 18:44 GMT

ஆம்பூர் நகராட்சி கூட்டம், நகர மன்ற தலைவர் பி.ஏஜாஸ் அகமது தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர பொதுநிதி செலவினங்கள், நிர்வாக மேம்பாடு குறித்த தீர்மானம் மற்றும் மற்ற செலவினங்கள் தீர்மானங்களுக்கு அங்கீகாரம் கோரப்பட்டது.

மேலும் நகரமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறினார்கள். இதற்கு நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அகமது விரைவில் அனைத்து கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். நகராட்சி ஆணையாளர் ஷகிலா, நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்