ஆம்பூர் தேவலாபுரம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா

ஆம்பூர் கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா நடைபெற்றது.

Update: 2022-06-09 16:57 GMT

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள தேவலாபுரம் திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் 92-ம் ஆண்டாக சிரசு திருவிழா நடைபெற்றது.

இதனையொட்டி செவ்வாய்கிழமை அம்மனுக்கு கூழ் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து சென்று வழிபட்டனர்.

அதைத் தொடர்ந்து அம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது. இரவில் கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சியில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்