தூக்குப்போட்டு ஆம்புலன்சு டிரைவர் தற்கொலை

தூக்குப்போட்டு ஆம்புலன்சு டிரைவர் தற்கொலை

Update: 2023-01-10 12:37 GMT

திருப்பூர்

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் நாகூர்கனி (வயது 39). இவர் திருமணம் முடிந்து குடும்பத்துடன் காலேஜ் ரோடு பாறைக்குழி பகுதியில் தங்கியிருந்து திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்சு டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவருடைய குடும்பத்தினர் அக்கம் பக்கத்திலும், மற்றும் அவர் வேலை செய்த மருத்துவமனையிலும் தேடி பார்த்தனர். அவரை காணவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியின் பின்புற வளாக சுற்றுச்சுவர் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொடங்கிய நிலையில் நாகூர்கனி பிணமாக தொங்கினார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நாகூர்கனிக்கு குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடன் பிரச்சினை இருப்பதாகவும் கூறப்படுறது. அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்