ஆம்புலன்ஸ் புறப்பட்டு செல்வதில் தாமதம்

ஆம்புலன்ஸ் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

Update: 2022-06-28 17:52 GMT

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று நீடாமங்கலம் வழியாக நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சரக்கு ரெயில் போக்குவரத்து காரணமாக நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. இதனால் ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அதில் இருந்த நோயாளி மற்றும் அவருடைய உறவினர்கள் தவித்தனர். சரக்கு ரெயில் சென்ற பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ஆம்புலன்ஸ் புறப்பட்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்