அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

திருமருகல் அருகே அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

Update: 2023-05-01 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றியம் சார்பில் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை சட்ட மன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். திருமருகல் வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன் முன்னிலை வகித்தார். முன்னதாக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய துணை அமைப்பாளர் சிலம்பரசன் வரவேற்றார். கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் மீனாட்சிசுந்தரம், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் புபேஷ் குப்தா ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் ராவ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்