அம்பை நகராட்சி கூட்டம்

அம்பை நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.

Update: 2023-06-01 18:51 GMT

அம்பை:

அம்பை நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜேஷ்வரன், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியம் (எ) கேபிள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி உதவி அலுவலர் குமரேசன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் அம்பை நகராட்சியில் கழிவு நீர் ஓடைகள் பராமரிப்பு, வாறுகால் சீரமைப்பு, பொதுக்கழிப்பறைகள் பராமரிப்பு செய்தல், திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் வழங்கல், நகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்