அம்பை:
அம்பபை நகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம், தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியம் என்ற கேபிள் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி உதவி அலுவலர் குமரேசன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் சமுதாய நலக்கூடம் சீரமைப்பு, குழந்தைகள் ஊட்டச்சத்து மைய பராமரிப்பு, சாலை அமைத்தல், வாறுகால் சீரமைப்பு, குடிநீர் குழாய்கள் அமைத்தல், கழிவுநீர் ஓடைகள் மறுசீரமைப்பு, மின்விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றும் வகையில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 4-வது தீர்மானமாக அம்பை நகராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் பேச்சிக்கனியம்மாள் வைத்த கோரிக்கையின்படி, அம்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சந்திப்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.