அமராவதி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

Update: 2022-11-13 16:00 GMT


உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது.இந்த அணை மூலம் மூலம் கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 1.50 லட்சம் ஏக்கர் நிலம் பயன் பெற்று வருகிறது.அந்த நிலத்தில் கரும்பு, வாழை, நெல், மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அமராவதி ஆற்றில் திறக்கும் தண்ணீர் அமராவதி ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கு கரூர் காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலில் கலக்கிறது.

ஆனால் தாராபுரம் வட்டத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை மற்றும் உப்பாறு அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதுடன் மழைநீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. இந்த அணையை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தரிசாக கிடக்கிறது.

எனவே அமராவதி ஆற்றில் வெள்ளம் தண்ணீரை நல்லதங்காள் மற்றும் உப்பாறு அணைக்கு திருப்பி விட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பாறு மற்றும் நல்லதங்காள் ஓடை பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்