ஆழ்வார்திருநகரி கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா
ஆழ்வார்திருநகரி கிளை நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி கிளை நூலகத்தில் 55-வது தேசிய நூல் வார விழா நடைபெற்றது. நூலகர் லட்சுமண குமார் வரவேற்று பேசினார். வாசகர் வட்டத் தலைவர் பிச்சைராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி கலந்து கொண்டு பேசினார். டி.என்.டி.ஏ. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி, ஆசிரியைகள் சரஸ்வதி, கிருபா, சிவகாமி ஆகியோர் பேசினர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாசகர் வட்ட தலைவர் பிச்சைராஜா பரிசுகளை வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.