ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில்குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-30 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார் திருநகரி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது .கூட்டத்திற்கு யூனியன் தலைவர் ஜனகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்திபன், உதவி தொடக்க கல்வி அலுவலர் பென்னிகர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதை தடுப்பது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்