அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 1

Update: 2023-05-03 10:43 GMT

அரக்கோணம், மே.4-

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 1992-94-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சென்னை, பெங்களூரூ, கோவை, மதுரை, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும், போலீஸ் துறையிலும், தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் என 52-க்கும் மேற்பட்டோர் சந்தித்து, தங்களது பழைய சம்பவங்களை நினைவுக் கூர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து அவர்கள், பள்ளிக்கு தங்கள் நினைவாக ஆம்ளிபயர், மைக்செட்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கி குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.

.


Tags:    

மேலும் செய்திகள்