முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-26 20:07 GMT

மேட்டூர்:

மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1989-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவரும், திருப்பூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் கேசவன் வரவேற்று பேசினார். தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் நடேசன், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் கண்ணன், வேதியியல் ஆசிரியர் பாரி ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறைகளுக்கு சென்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில் 5 முன்னாள் மாணவிகள் உள்பட 45 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மின்வாரியத்தில் பணியாற்றி வரும் செழியன் என்ற முன்னாள் மாணவர் பள்ளிக்கு 25 நாற்காலிகளை இலவசமாக வழங்கினார். மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு பிரிண்டர் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராமச்சந்திரன், சத்தியநாதன், பூபாலன், ராஜா, பிலோமினா ஆகியோர் செய்திருந்தனர். இதையடுத்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்