முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
புகழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1990-1991-ம் ஆண்டு அறிவியல் பிரிவில் படித்த 37 மாணவர்கள் ஒன்று சேர்ந்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த சந்திப்பில் 31 ஆண்டுகளுக்கு பின் தங்களுடன் பயின்ற நண்பர்களை பார்த்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தற்போதைய ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவ, மாணவிகள் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டனர்.
பின்னர் பேசிய முன்னாள் மாணவர்கள் இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அரசு பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை அரசு பள்ளியால் உயர்ந்த முன்னாள் மாணவர்கள் செய்வது இந்த சமுதாயத்திற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கூறினார்கள். இதில் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.