மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-08-09 17:29 GMT

கச்சிராயப்பாளையம், 

சங்கராபுரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சி சேர்ந்த சுமார் 200 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் துரைதாகப்பிள்ளை தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், அவைத்தலைவர் ரவி, ஒன்றியகுழு தலைவர் திலகவதி ராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர துணை செயலாளர் கோவிந்தன் வரவேற்றார்.

இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 200 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு உதயசூரியன் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாகராஜன், கமரூதின், சங்கராபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள், நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்