மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்

வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-10-20 18:45 GMT

திருக்கோவிலூர்:

ரிஷிவந்தியத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பெண்கள் மற்றும் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களுக்கு சால்வை அணிவித்து வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வரவேற்றார். நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்பிரமணியன், கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க துணைச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்