மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்

மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-04-30 19:00 GMT

ஏரல்:

ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட பழனியப்பபுரம், பிரன்டார்குளம், கருங்கடல், புளியங்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க. மாற்றுக்கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் செபாஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்