பொதுமக்களுக்கு அன்னதானம்; அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டையில் பொதுமக்களுக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அன்னதானம் வழங்கினார்.
நெல்லை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உணவு வழங்கினார். இதில் மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் பிரான்சிஸ், கலைஞர் தமிழ் பேரவை தென்மண்டல தலைவர் மிக்கேல் எஸ்.ராஜேஷ், தி.மு.க.பகுதி செயலாளர் அண்டன் செல்லத்துரை, நிர்வாகிகள் மெல்வின் ராஜா, ஜெகன், எம.ஏ.சி.சேவியர், உவரி ஆல்ட்ரின், பழனிவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.