குடியரசு தினத்தை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு
குடியரசு தினத்தை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி பொன்மலை மாவடி குளம் அருகே உள்ளது காருண்யாநகர். இந்த பகுதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டு ஆகியும் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் செய்து கொடுக்கவில்லையாம். இதுகுறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பலனில்லையாம். எனவே குடியிருக்க முடியாத மக்களுக்கு குடியரசு தினம் எதற்கு எனக்கூறி குடியரசு தினத்தை புறக்கணித்து தமிழ் புலிகள் மத்திய மண்டல செயலாளர் ரமணா தலைமையில் மக்கள் பாதுகாப்பு பொதுச்செயலாளர் ராஜ்குமார், திருச்சி மாவட்ட தலைவர் சிட்டிசன் மற்றும் காருண்யா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனை அறிந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.