அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-30 18:30 GMT

ஆய்வு என்ற பெயரில் அமைப்பு சாரா கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர்களை அலைக்கழிக்கும் மத்திய, மாநில அரசை கண்டித்து கரூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளர்கள் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தங்கவேல் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் விளக்க உரையாற்றினார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்