பரமக்குடி,
பரமக்குடி பஸ் நிலையம் பகுதியில் அனைத்து கட்சி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வே.ரா. மறைவிற்கு இரங்கல் கூட்டம் நடந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேவா தளம் மாநில செயலாளர் அப்துல் அஜீஸ் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். பொறுப்பு குழு உறுப்பினர்கள் கோட்டை முத்து, தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர் அனைவரையும் வரவேற்றார். பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மாநில செயலாளர் ஆனந்த குமார், சோ.பா.ரெங்கநாதன், மாநில பேச்சாளர் ஆலம், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி. அ.தி.மு.க. நகர் செயலாளர் ஜமால், ம.தி.மு.க. நகர் செயலாளர் சடாச்சரம், இடது கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர் ராஜா, சுதந்திர போராட்ட வாரிசுகள் சங்க பொதுச் செயலாளர் ஹாரிஸ், ராஜீவ் காந்தி கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் நாராயணன், நிர்வாகிகள் ஜோதிபாலன், சங்கரன், மாவட்ட மகளிரணி தலைவி ராமலட்சுமி, அப்தாஹிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார தலைவர்கள் ஆர்ட் கணேசன், பாம்பூர் வேலுச்சாமி ஆகியோர் நன்றி கூறினர்.