அனைத்து ஜமாத் கூட்டமைப்பு கூட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.

Update: 2023-08-01 19:28 GMT

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல தலைவர், கவுன்சிலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து மேலப்பாளையத்தில் கடை அடைப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் வழக்கை வாபஸ் வாங்கும் வரை போராட்டங்கள் நடத்துவதாக அனைத்துக்கட்சி, ஜமாத் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மேலப்பாளையத்தில் அனைத்து கட்சி, அனைத்து அமைப்பு, அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அப்துல்வகாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பகுதி தலைவர் முகைதீன் அப்துல் காதர், தி.மு.க. பகுதி செயலாளர் துபாய் சாகுல், இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் ஹயாத், முஸ்லிம் முன்னணி கழகம் மாவட்ட தலைவர்அப்பாஸ் ஹில்மி, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநிலத் துணைச் செயலாளர் ரசூல் மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் நடராஜன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் பரக்கத்துல்லா, மேலப்பாளையம் வணிகர்கள் கூட்டமைப்பு செயலாளர் கமரி அக்பர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மேலப்பாளையம் தலைவர் பீர் மஸ்தான், மேலப்பாளையம் அனைத்து இறைச்சி வியாபாரிகள் சங்க தலைவர் முன்னா முகமது, கவுன்சிலர்கள் அலி சேக் மன்சூர், சுந்தர், நித்திய பாலையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாநகராட்சியின் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கால்நடை கொட்டகை அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி கொட்டகையை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா, தி.மு.க. மாநகர துணைச்செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்