அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாராபுரம் தாலுகா பேரவை கூட்டம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாராபுரம் தாலுகா பேரவை கூட்டம்

Update: 2022-06-13 10:56 GMT

தாராபுரம்

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாராபுரம் தாலுகா பேரவை கூட்டம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜி.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வளர்மதி, மாவட்ட துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தாராபுரம் தாலுகா ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.அதில் ஒருங்கிணைப்பாளராக ராஜேஸ்வரி, உறுப்பினர்களாக மகுடீஸ்வரி, நவநீதம், அனிதா, கமலம், மோகனசுந்தரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியை மாவட்ட தலைமை மருத்துவமனையாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். சின்னக்காம்பாளையம் பேருராட்சி 4- வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி கேட்டு பலமுறை மனு அளித்தும் நிதி இல்லை எனக்கூறி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்குகள் கேட்டு மனு கொடுத்தும் பெயரளவில் 2 தெருவிளக்குகள் மட்டுமே போடப்பட்டுள்ளது. தெருவிளக்கு அமைத்து, குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மகுடீஸ்வரி நன்றி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்