அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-17 19:58 GMT

சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு தொகையை மாதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் கார்த்தி (மாநகர்), பிரவீன் (புறநகர்) ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொருளாளர் இப்ராஹிம் கண்டன உரையாற்றினார். இதில் மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்