அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
விழுப்புரத்தில் அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
விழுப்புரம்:
அகில இந்திய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் பளிங்கன், முன்னாள் தலைவர் சிவசண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் கனகராஜ், கவுரவ தலைவர் நடன சிகாமணி, மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சேரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பின்படி தகுதியுடன் விருப்பமுள்ளவர்களுக்கு உயர் பென்ஷன் வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அண்டை மாநிலங்களில் வழங்குவதுபோல் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை ரூ.500 முதல் ரூ.3,500 வரை மட்டுமே ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் குடும்ப பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத்தலைவர்கள் பாஸ்கர், பாஸ்கரன், சர்குடிவரதராஜன், மணிமாறன், துணை பொதுச்செயலாளர்கள் பார்த்தசாரதி, அமர்சிங், பரமசிவம், கலியபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பஞ்சாட்சரம் நன்றி கூறினார்.