அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும், சாமானிய ஏழை எளிய மக்களுக்கு பாதகமாகவும், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை இருப்பதாக கூறி நிதிநிலை அறிக்கையை நகலை எரிக்கும் போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குளித்தலையில் நேற்று நடந்தது. இதற்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மத்திய அரசின் நிதி நிலையை கண்டித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் இதற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நிதிநிலை அறிக்கை நகலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எரிக்க முயன்றபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.