அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கூட்டம்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கூட்டம்
திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-க்கான அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை தேவேந்திரன், துணை கலெக்டர் ராஜன், தனி தாசில்தார் முத்து முருகேசபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக்கூடம் அமைத்து தரக்கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாரத் குமார், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன், கால்நடை உதவி டாக்டர் சிவபிரியா, வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் துறைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். முடிவில் ஊராட்சி செயலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.