துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்க வேண்டும்

சுகாதாரத்தை ேபணி பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்க வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

Update: 2022-09-20 18:31 GMT


சுகாதாரத்தை ேபணி பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்க வேண்டும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

கண்காணிப்புக்குழு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இயன்முறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புகுழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாரிமுத்து எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

தனி அறை ஒதுக்கீடு

இயன்முறையில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, காலுறை வழங்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வெடுக்க தனி அறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளையும் எந்தவித இடையூறு இன்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வீடு வழங்கவும் மற்றும் பிற வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதனையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் திருவாரூர் உதவி கலெக்டர் சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் விஜயன் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்