அவினாசியில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின்கம்பம் இடம் மாற்றப்பட்டது.

அவினாசியில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின்கம்பம் இடம் மாற்றப்பட்டது.

Update: 2022-10-01 11:02 GMT

அவினாசி

அவினாசியில் போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின்கம்பம் இடம் மாற்றப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு அருகில் மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, சேவூர் ரோடு என மும்முனை சந்திப்பு உள்ளது. அத்துடன் சந்திப்பு ரோடு பகுதியில் பேக்கரி ஒட்டல். ஜவுளி, நகை கடைகள் வங்கி என ஏராளமான வணிக நிறுவனங்களும் உள்ளது. பள்ளி கல்லுரிக்கு செல்லும் வாகனங்கள, காரி, லாரி, அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆயிரகணக்கான இருசக்கர வாகனங்கள் என எந்த நேரமும் மும்முனை சந்திப்ப ரோட்டில் போய் வருகின்றன. சந்திப்பரேட்டில் உள்ள ஒரு மின்கம்பத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.அந்த கம்பத்தைவேறு இடத்திற்கு மாற்றி அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் உள்ளிட்ட சமூக ஆர்வார்கள் பல ஆண்டுகளாக மின் வாரிய அலுவலகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் நேற்று போக்குவரத்திற்கு இடையூராக இருந்த மின்கம்பத்தை மின்வாரிய அலுவலர்கள் மாற்றி அமைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்