அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும்
மழை காலத்திற்கு முன்பு அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
குத்தாலம்:
மழை காலத்திற்கு முன்பு அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
பேரூராட்சி கூட்டம்
குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.தீர்மானங்களை பேரூராட்சி அலுவலர் மாதவி வாசித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்களின் இடையே நடந்த விவாதம் வருமாறு;-
சேகர் (தி.மு.க):- 1-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி.எஸ். நகர் சிமெண்டு சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும்.
முத்துலட்சுமி (தி.மு.க.);-3-வது வார்டு மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்.
தூர்வார வேண்டும்
சுகன்யா (பா.ம.க.):- 4-வது வார்டு பொதுமக்கள் அனைவருக்கும் குப்பைகள் தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எம்.சி.பாலு (அ.தி.மு.க.);- பேரூராட்சியில் உள்ள அதை்து வாய்க்கால்களையும் மழைக்காலத்திற்கு முன்பு தூர்வார வேண்டும்.
காயத்ரி (தி.மு.க.);- உத்திரமேலவீதி பகுதியில் உள்ள பொதுவினியோக கடை கட்டிடம் பழுதடைந்துள்ளதால் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
ராஜஸ்ரீ (தி.மு.க.);-சின்ன செங்குந்தர் தெரு கோவில் திருவிழாவினை முன்னிட்டு சாலை அமைத்து கொடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மழைநீர் வடிகால்
ஞானசம்பந்தம் (தி.மு.க.):- பெருமாள் கோவில் மட விளாகம் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
நிரஞ்சனி தேவி (காங்கிரஸ்);- நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் பாலங்கள் இடிக்கப்பட்டு புதிதாக அமைக்கப்படுவதால் வடிகால்களில் மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன் (அ.தி. மு.க.);-சாந்தாராம் சாலை மேம்பாடு செய்து தர வேண்டும்.ெரயில்வே ரோடு அருகில் உள்ள குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும்.
நடவடிக்கை
சங்கீதாமாரியப்பன்(தலைவர்);-உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்சுதீன்(துணைத் தலைவர்);- குத்தாலம் பேரூராட்சியில் மழைக்காலத்திற்கு முன்பு மின்கம்பங்களை பாதிக்கும் வகையில் உள்ள மரங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.