அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம்

கொள்ளிடம் ஒன்றியத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது

Update: 2023-01-21 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எழில் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 17 ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கலைஞர் வேளாண் வளர்ச்சி உற்பத்தி திட்டம் கீழ் செயல்படுத்தக்கூடிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மேலும் வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஆகியவை இணைந்து ஊராட்சிகளில் தன்னிறைவு பெறும் வகையில் சாலை அமைத்தல், கால்நடைகளுக்கு தேவையான மரங்களை நடுதல், களம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கனகராஜ், சந்திரசேகர், காந்திமதி சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்