ஒற்றை சாளர முறையில் அனைத்துத்துறை அனுமதிகளையும் பெறலாம்

தொழில் தொடங்குவோர் ஒற்றை சாளர முறையில் அனைத்துத்துறை அனுமதிகளையும் பெறலாம் என கருத்தரங்கில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ் தெரிவித்தார்.

Update: 2023-04-11 19:41 GMT


தொழில் தொடங்குவோர் ஒற்றை சாளர முறையில் அனைத்துத்துறை அனுமதிகளையும் பெறலாம் என கருத்தரங்கில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ் தெரிவித்தார்.

கருத்தரங்கம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக அரங்கில் தமிழ்நாடு தொழில் துறை வழிகாட்டுதல் நிறுவனம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் தொழில் தொடங்க, விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணையதளவசதி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

கலெக்டர் ஜெயசீலன் தலைமையிலும், தொழில் மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் ஆணைய கிரேஸ் எல்.பச்சாவ் முன்னிலையிலும் நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்டத்தில் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டை அதிகப்படுத்துவதற்கான தேவையும் வாய்ப்புகளும் மாவட்டத்தில் இருக்கின்ற நிலையில் தொழில் நிறுவனங்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஒற்றை சாளர முறை

கருத்தரங்கில் பேசிய தொழில்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் எல்.பச்சாவ் கூறியதாவது:- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற தனித்தனி துறைகளை அணுக வேண்டிய அவசியம் இல்லை.

அனைத்து தொழில் முனைவோர்களும் இந்த இணைய வழி ஒற்றை சாளர முறையில் பயன்பெறும் வகையில் மாவட்ட தோறும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற கருத்தரங்கில் ஒற்றை சாளர முறையில் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிப்பது குறித்தும் மிகவும் விரிவாக எடுத்து கூறப்படுகிறது.

தேவையான உதவி

மேலும் அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் தொழில் முனைவோர்க்கான வழிகாட்டு அலுவலர் மூலம் தேவையான உதவிகளை பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு தொழில் துறை வழிகாட்டுதல் நிறுவன மண்டல மேலாளர் சுரேஷ், அரசு அலுவலர்கள், பல்வேறு தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்