அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

கீழையூரில் அனைத்துதுறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-09-23 18:45 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் ஊராட்சி ஒன்றியம், பாலக்குறிச்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகை மாவட்ட உதவி இயக்குனர் (தணிக்கை) மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 16 அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்ந்த நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து சாலை மேம்பாடு, குடிநீர் பிரச்சினை, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா, சிட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச் சத்துக்கள் அடங்கிய தானிய வகைகள் வழங்கப்பட்டது. இதில் கீழ்வேளூர் சமூகநல பாதுகாப்பு துணை தாசில்தார் அமுத விஜயரங்கன், திருக்குவளை வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மை, மருத்துவம், சமூகநலம் உள்பட 16 துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்