அனைத்து கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அனைத்து கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2023-08-05 18:45 GMT

சீர்காழி:

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்து கிறிஸ்தவ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பங்குத்தந்தை ஜோசப் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் எருக்கூர் தலித்தாஸ், ஸ்டீபன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்ஜினீயர் பால்ராஜ் ரெத்தினம் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணிவண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி ஆசைத்தம்பி ஆகியோர் பேசினர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இயேசுராஜ், டேனியல் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர் முடிவில் வக்கீல் தாமஸ் குமார் நன்றி கூறினார். முன்னதாக பங்குத்தந்தை அந்தோணி டேனியல் தலைமையில் சீர்காழி ெரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து சீர்காழி பழைய பஸ் நிலையத்தை அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்