கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் : டிஜிபி உத்தரவு

கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-08 07:16 GMT

சென்னை ,

கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் ,கந்துவட்டி கொடுமையால் நேற்று தற்கொலை செய்துகொண்டார் .

இந்த நிலையில் 'ஆபரேஷன் கந்துவட்டி' பெயரில் கந்துவட்டி தொடர்பான வரக்கூடிய புகார்கள் ,நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்