அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும்

முதுகுளத்தூர் பகுதியில் அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-12-12 18:30 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா ராஜேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் ரவி, துணைத்தலைவர் கண்ணகி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கால்வாய்களையும் முறையாக தூர்வாரினால் அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்மாய்கள் நிரம்பி விவசாயம் செழிக்க வழிவகுக்கும். எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்களை அகற்றி முறையாக தூர்வார வேண்டுமென அனைத்து கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தனர். இதற்கு சண்முகப்பிரியா ராஜேஷ் பேசுகையில், இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். கூடிய விரைவில் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கால்வாய்களையும் முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதி அளித்துள்ளார். எனவே இப்பகுதியில் உள்ள கால்வாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்