அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை

சீர்காழி பஸ் நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-03 18:20 GMT

சீர்காழி:

சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வரும் சென்னை, மதுரை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட நீண்ட தூர பஸ்கள் சீர்காழி பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. மாறாக சீர்காழி புறவழிச்சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மயிலாடுதுறை, சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வரும் அனைத்து நீண்ட தூர பஸ்கள் சீர்காழி பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லவும், இதை மீறும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்