மோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது

நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-06-08 19:15 GMT

நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் சோதனை

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி மது, சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகூர் அருகே உள்ள காரைமேடு பகுதி வழியாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

400 மதுபாட்டில்கள் பறிமுதல்

அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை வழிமறித்து விசாரித்தனர். இதில் அவர் நாகை வெளிப்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயவீரபாண்டியன் மகன் பிரசாந்த் (வயது22) என்பதும், அவர் வைத்திருந்த பையில் மதுபாட்டில்கள் இருந்ததும், அவற்றை புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கடத்தி வரப்பட்ட 400 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பார்வையிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்