காரில் சாராயம் கடத்தல்

செம்பனார்கோவில் அருகே காரில் கடத்திய 952 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-13 17:11 GMT

திருக்கடையூர்

செம்பனார்கோவில் அருகே காரில் கடத்திய 952 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காரில் சாராயம் கடத்தல்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதிக்கு காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மகாராஜாபுரத்தில் செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் நிறுத்த முற்பட்டனர். ஆனால், போலீசாரை கண்டதும் காரை அங்கேயே நிறுத்தி விட்டு அதனை ஓட்டி வந்தவர் கீழே குறித்து தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அந்த காரில் போலீசார் சோதனையிட்டபோது அதில் மூட்டை, மூட்டையாக காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து கடத்தி வரப்பட்ட 952 லிட்டார் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்