மதுவிற்ற பெண் கைது
வேலூரில் மதுவிற்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 290 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் சாராய விற்பனையை தடுக்க திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மேல்மொணவூர் பகுதியில் ஒரு வீட்டில் அரசு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவரது தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது ராஜாமணி என்ற பெண், தனது வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் இருந்து 290 மது பாட்டில்களை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.